லெபனானில் ஹெஸ்பொல்லா நிலைகளை இஸ்ரேல் அழித்தது ஐடிஎஃப் தகவல்

லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பின் பல நிலைகளை இஸ்ரேலிய படைகள் தாக்கி அழித்துள்ளதாக
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.
அதன்படி, லெபனானின் மவுண்ட் டோவ் பகுதியில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகள்,
ஐடிஎஃப்பின் 810வது “மலைகள்” படைப்பிரிவின் ரிசர்வ் பட்டாலியன் மற்றும்
பொறியியல் பிரிவுகளால் குறிவைத்து அழிக்கப்பட்டன.
“எல்லைப் பகுதியில் ஹெஸ்பொல்லா தனது இருப்பை எதிர்காலத்தில் வலுப்படுத்துவதைத் தடுக்கவே
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,” என்று ஐடிஎஃப் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லெபனான் எல்லைப் பகுதியில் கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையிலான
பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த தாக்குதல் அந்த நிலைமையை மேலும் மோசமாக்கும்
என சர்வதேச வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன




