SuperTopAds

உலகளாவிய ரீதியில் திடீரென செயலிழந்த செயலிகள்-பயணர்கள் அதிர்ச்சி

ஆசிரியர் - Editor IV
உலகளாவிய ரீதியில் திடீரென செயலிழந்த செயலிகள்-பயணர்கள் அதிர்ச்சி

உலகளாவிய ரீதியில் இன்றையதினம் காலை முதல் Amazon, Canva, Snapchat, மற்றும் Zoom உள்ளிட்ட செயலிகளில் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 இந்த செயலிழப்பு பல முக்கிய வங்கிகளில் செயற்பாடுகளை பாதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகின் மிகப்பெரிய கிளவுட் சேவை வழங்குநர்களில் ஒன்றான AWS திடீரென செயழிலந்துள்ளதால் அதனுடன் இணைந்த நூற்றுக்கணக்கான செயலிகள் பாதிப்பை சந்தித்து பரவலான இடையூறுகளை ஏற்படுத்தியது.

குறிப்பாக மாணவர்கள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் கேன்வா, மணிக்கணக்கில் செயலிழந்தது. 

 ஃபோர்ட்நைட் மற்றும் ரோப்லாக்ஸ் போன்ற கேமிங் தளங்களை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கூடிய விரைவில் இவை பழைய நிலைக்கு திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Radio