SuperTopAds

ஓடுபாதையை விட்டு விலகி கடலில் விழுந்த விமானம்-வெளியான அதிர்ச்சி சம்பவம்...

ஆசிரியர் - Editor IV
ஓடுபாதையை விட்டு விலகி கடலில் விழுந்த விமானம்-வெளியான அதிர்ச்சி சம்பவம்...

ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போயிங் 747 சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி கடலில் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம்  இன்று  அதிகாலை 3:50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்து கொண்டிருந்த குறித்த  விமானம் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பாதுகாப்பு ரோந்து காரில் மோதி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

ரோந்து காரில் இரண்டு பேர் இருந்த நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை, விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்களும் மருத்துவ சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து சம்பவத்தையடுத்து விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் தெற்கு மற்றும் மத்திய ஓடுபாதைகள் தொடர்ந்து இயங்கும் என்று ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.

Radio