SuperTopAds

பற்றியெரியும் டாக்கா விமான நிலையம்- வெளியான அதிர்ச்சி தகவல்...

ஆசிரியர் - Editor IV
பற்றியெரியும் டாக்கா விமான நிலையம்- வெளியான அதிர்ச்சி தகவல்...

வங்கதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் கடும் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக டாக்கா விமான நிலையம் முற்றிலும் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன் காரணமாக  விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும் தீ வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்துவதில் கடும் சவால் ஏற்பட்டிருக்கிறது. 

தீ விபத்து காரணமாக சென்னை-டாக்கா விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன

தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Radio