3 மில்லியன் ரூபாய் மற்றும் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

பொலன்னறுவை - பண்டிவேவ பகுதியில் 2.3 கிராம் ஹெராயின் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 3.02 மில்லியன் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




