மீண்டும் பங்களாதேஷில் வெடித்தது போராட்டம்..

வங்கதேசத்தில் புதிய அரசியல் சட்டத்தை எதிர்த்து போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் விரட்டியடித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில் , முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் தற்போது இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது.
இந்த இடைக்கால அரசு இன்று(ஒக்.17) புதிய அரசியல் சாசனத்தை வெளியிட்டது.
குறித்த சாசனத்தை எதிர்த்து அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்தது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அந்நாட்டின் நாடாளுமன்ற வளாகம் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பாதுகாப்புக்காக இருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைய மறுக்கவே இந்த மோதல் ஏற்பட்டது.
தொடர்ந்து , அவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும்காவல்துறையினர் தங்கியிருந்த கூடாரங்களையும் சேதப்பபடுத்தினர்.
போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவுவதால் கூடுதல் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.




