SuperTopAds

வெடித்துசிதறிய எரிமலை இந்தோனேஷிய மக்களுக்கு விடுக்கப்பட்ட பேரழிவு எச்சரிக்கை

ஆசிரியர் - Editor IV
வெடித்துசிதறிய எரிமலை இந்தோனேஷிய மக்களுக்கு விடுக்கப்பட்ட பேரழிவு எச்சரிக்கை

இந்தோனேஷியாவில், பாலி தீவுக்கு அருகே கிழக்கு நுாசா தெங்காரா மாகாணத்தில் 5200 அடி உயரம் கொண்ட லெவோடோபி லகி லகி எரிமலை அமைந்துள்ளது.

செயல்பாட்டில் இருக்கும் இந்த எரிமலையானது சமீப காலமாக அடிக்கடி வெடித்து தீ பிழம்புகளை கக்கி வருகிறது.

இந்நிலையில், நேற்றும் லெவோடோபி லகி லகி எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த வெடிப்பு, ஒன்பது நிமிடங்கள் நீடித்த நிலையில், 10 கி.மீ உயரம் வரை எரிமலை சாம்பலுடன் கரும்புகை எழுந்தது.

எரிமலை வெடித்தபின் மழை பெய்தால், சாம்பல் மற்றும் சேறு கலந்து பேரழிவை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, அருகிலுள்ள கிராமங்களில் வசிப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராம மக்கள் மற்றும் சுற்று லாப் பயணியர் எரிமலையிலிருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Radio