கணவர் பரிசளித்த மோதிரத்தை இழந்த மூதாட்டி...

கனடா நாட்டின் ஒட்டாவாவைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி டெர்ரி தாம்சன், சில மாதங்களுக்கு முன்னர் தனது ஓய்வு இல்லத்தின் வெளியே நின்றிருந்தபோது இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில், தன்னுடைய மறைந்த கணவர் பரிசளித்த வைர மோதிரத்தை இழந்துள்ளார்.
இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியான பின்னர், லா மாய்சன் டோர் நகைக்கடை உரிமையாளர் பிரென்ட் ஹார்டன், தனது மகளின் கோரிக்கைக்கு ஏற்ப, மூதாட்டிக்கு புதிய மோதிரத்தை பரிசாக வழங்கினார்.
புதிய மோதிரத்தில் அக்வாமெரைன் கல், இரண்டு செயற்கை வைரங்கள் மற்றும் 14 கரட் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், தாம்சனின் மறைந்த கணவர் எழுதியிருந்த “With love, Bill” என்ற வரியையும் பொறித்துள்ளனர்.
இந்த மோதிரத்தின் மதிப்பு சுமார் 6,000 கனேடிய டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் திருடப்பட்ட வைர மோதிரத்திற்கு பதிலாக, அழகாக மீண்டும் உருவாக்கப்பட்ட மோதிரத்தைப் பெற்றபோது டெர்ரி தாம்சன் கண்ணீர் விட்டார்.
மூதாட்டி தாம்சன் மற்றும் அவரது மகள் நகைக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மகளுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




