SuperTopAds

இந்தோனேசியாவில் தீப்பிடித்த எண்ணெய் கப்பல்- பலர் உடல்கருகி பலி

ஆசிரியர் - Editor IV
இந்தோனேசியாவில் தீப்பிடித்த எண்ணெய் கப்பல்- பலர் உடல்கருகி பலி

இந்தோனேசியாவின் படாம் தீவில் உள்ள தன்ஜங்குன்காங் துறைமுகத்தில் பாமாயில் எண்ணெய் கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கப்பலின் காஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்து பயங்கர வெடிவிபத்தும் ஏற்பட்டுள்ளது 

இந்தக் கப்பலில் நேற்று ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்

இந்த நிலையில் இந்த விபத்தில் 10 பணியாளர்கள் தீயில் கருகி பலியான நிலையில் மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Radio