SuperTopAds

காசா தொடர்பில் பிரித்தானியாவின் நகர்வு...

ஆசிரியர் - Editor IV
காசா தொடர்பில் பிரித்தானியாவின் நகர்வு...

காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கை தொடர்பில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் குழு ஒன்று பிரித்தானியாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 

இதன்போது உலகளாவிய முன்னணி நிதி நிறுவனங்களும் கலந்துகொண்டுள்ளதாக சல்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் எகிப்திய செங்கடல் ரிசார்ட்டான ஷர்ம் எல்-ஷேக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகின் முதன்மையான தலைவர்கள் பலர் கலந்துகொண்டு இஸ்ரேல் - ஹமாஸ் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதாக தெரியவருகிறது.

பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சகம், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதன்மையான அதிகாரிகளை இரகசியமாக ஒன்றிணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது . 

குறிப்பாக மூன்று நாட்கள் நீடிக்கும் இந்த மாநாட்டின் நோக்கமானது, பாலஸ்தீனத்தால் வழிநடத்தப்படும் போருக்குப் பிந்தைய காசாவிற்கான முக்கியமான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளை தொடங்குவதாகும்.

இந்த நிலையில் குடியிருப்புகளை கட்டி எழுப்புதல், உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகலை மீட்டெடுப்பது உள்ளிட்ட முதன்மையான இலக்குகளை விவாதிக்க உள்ளதாக துணை வெளிவிவகார அமைச்சர் ஹமிஷ் பால்கனர் தெரிவித்துள்ளார். 

இவற்றுடன், முன்னெடுக்கப்போகும் பணியின் அளவு, அது எவ்வளவு அவசரமானது, எவ்வளவு சிக்கலானது என்பதையும், எத்தனை ஆண்டுகளாகும், பல பில்லியன் தொகை செலவாகும் என்பதும் அறிந்துள்ளதாக அமைச்சர் பால்கனர் தெரிவித்துள்ளார்.  

இந்த சந்திப்பின் போது ஜோர்டான், சவுதி அரேபியா, ஜேர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் முதன்மையான அதிகாரிகளுடன் பாலஸ்தீன ஆணையமும் கலந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

Radio