SuperTopAds

Meta நிறுவனம் வெளியிட்ட தகவல்...

ஆசிரியர் - Editor IV
Meta நிறுவனம் வெளியிட்ட தகவல்...

Meta நிறுவனம் உலகளவில் மிகப்பெரிய சமூக ஊடக தளமான Facebook-இல் போலி மற்றும் முகம் தெரியாத ப்ரொஃபைல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், தளத்தில் தனது முகத்தைப் பயன்படுத்தாத பயனர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை அறிவிப்புகள் அனுப்பப்படத் தொதொடங்கியுள்ளன.

Facebook கடந்த சில ஆண்டுகளாக போலி கணக்குகள், தவறான தகவல் பரப்பல் மற்றும் அடையாள மோசடிகள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. 

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், Meta நிறுவனம் தற்போது உண்மையான பயனர்களை மட்டுமே Facebook தளத்தில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, முகம் தெளிவாக தெரியாத ப்ரொஃபைல்கள், குறிப்பாக கார்ட்டூன், விலங்குகள், இயற்கைக் காட்சிகள், லோகோக்கள் அல்லது பிற நபர்களின் படங்களைப் பயன்படுத்தும் கணக்குகள் இப்போது கண்கண்காணிக்கப்படுகின்றன

Facebook இல் தற்போது சில பயனர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் அனுப்பப்படுகிறது. அதில், தங்களது முகம் தெளிவாகத் தெரிவதான ஒரு புகைப்படத்தை ப்ரொஃபைல் படமாக 30 நாட்களுக்குள் மாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

குறிப்பிட்ட காலவரம்பிற்குள் இதைச் செய்யாத பயனர்களின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும் என்றும், மீண்டும் மீண்டும் விதிகளை மீறுவோரின் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்றும் தெரிதெரிவிக்கப்பட்டுள்ளது

Meta நிறுவனம் உண்மையான பயனர்களுக்கு இந்த மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளது. இருப்பினும், எச்சரிக்கை செய்தி கிடைக்கும் போது அதை புறக்கணிக்காமல், தங்களது ப்ரொஃபைல் புகைப்படத்தை மாற்றிக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும், தங்களது Facebook பெயர் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்தவும், சந்தேகமான அல்லது போலியான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும் Meta நிறுவனம் பயனர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை Facebook தளத்தை பாதுகாப்பானதும் நம்பகமானதுமான இடமாக மாற்றும் ஒரு முயற்சியாகும். Meta நிறுவனம் உலகம் முழுவதும் போலி கணக்குகள், ஏமாற்றுப் ப்ரொஃபைல்கள், மற்றும் தவறான தகவல்களை தடுக்கும் வகையில் பல புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

மொத்தத்தில், இந்த புதிய விதிமுறைகள் Facebook தளத்தில் உண்மையான அடையாளங்களை மட்டுமே பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.

Radio