சீன பாடசாலைகளில் முதன்முறையாக ஹிந்தி பாடம் நடைமுறைக்கு வந்த புதிய சட்டம்

எம்.பி.பி.எஸ். படிப்புகளை தொடர்வதற்காக இந்திய மாணவர்கள் அதிக அளவில் சீனாவுக்கு செல்கின்றனர். இந்நிலையில், சீனாவில் ஹிந்தியை படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது.
இதன்படி, பல்கலைக்கழக அளவில் சர்வதேச கல்வித்துறைகளில் ஹிந்தியும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில்இ சீனாவில் உள்ள பள்ளிகளிலும் ஹிந்தியை பாடப்பிரிவில் ஒன்றாக சேர்த்துள்ளனர்.
இதனை முன்னிட்டு,சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத், ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பிரதீக் மாத்தூர் ஆகியோர், ஹிந்தி பயிற்றுவிப்பாளரான பவ்யா மேத்தாவை, ஷாங்காய் நகரில் இன்று கௌரவித்துள்ளனர்
இதன்படி, சீனாவில் உள்ள பாடசாலைகளில் முதன்முறையாக ஹிந்தி பாடம் கற்பிக்கப்பட உள்ளது. இதனால் இரு நாடுகளின் வருங்கால தலைமுறையினர் இடையே ஆழ்ந்த கலாசார உறவுக்கான புதிய சாத்தியக்கூறுகளும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது
பவ்யா, இந்தியாவின் போர் வீரரான கீர்த்தி சக்ரா விருது பெற்ற பிரிகேடியர் ரவி தத் மேத்தாவின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது




