SuperTopAds

மடகாஸ்கரில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம் அதிபர் விமானத்தில் தப்பியோட்டம்

ஆசிரியர் - Editor IV
மடகாஸ்கரில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம் அதிபர் விமானத்தில் தப்பியோட்டம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மடகாஸ்கர்.நாட்டின் அதிபராக அண்ட்ரே ரஜோலினா செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஊழல்இ வறுமைஇ மின் தடுப்பாடுஇ தண்ணீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த மாதம் 25ம் திகதி  தொடங்கிய போராட்டம் அதிபர் ரஜோலினாவுக்கு எதிராகவும் அவரது அரசுக்கு எதிராகவும் திரும்பியது.

மேலும்இ அந்நாட்டு ராணுவத்தின் கெப்செட் எனப்படும் முக்கிய படைப்பிரிவு அதிபரின் உத்தரவுகளை ஏற்க மறுத்துஇ அரசுக்கு எதிராக திரும்பியது.

இந்நிலையில்இ போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அதிபர் ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.

அவர் பிரான்ஸ் ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Radio