SuperTopAds

22 ஆண்டுகள்பின் மகளை சந்தித்த தந்தை...

ஆசிரியர் - Editor IV
22 ஆண்டுகள்பின் மகளை சந்தித்த தந்தை...

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் காசா இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்த போர் தற்போது முடிவுக்கு வந்து உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

இதையடுத்து முதல் கட்டமாக இரு தரப்பினருக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடங்கி இருக்கிறது. 

காசாவில் ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளில் 20 பேர் மட்டுமே உயிரோடு இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். 

அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் இருந்து சுமார் 1,900 பலஸ்தீனர்கள் கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும் இதுதான் போர் நிறுத்தத்தின் முதற்கட்ட நிலை என்று கூறப்பட்டது.

போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து நேற்று காலை முதற்கட்டமாக இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 7 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர். 

இவர்கள் அனைவரையும் ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.இதை கேட்டு அவர்களது உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இஸ்ரேல் தலைநகர் டெல்–அவிவ் உள்ளிட்ட நகரங்களில் பெரிய திரையில் பிணைக்கைதிகள் விடுதலை நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அவர்கள் கையில் கொடியுடன் உற்சாகத்தை வெளிபடுத்தினார்கள்.

இஸ்ரேல் இராணுவம் அவர்களுக்கு உடற்தகுதி சோதனை மேற்கொண்டபின்னர், தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று குடும்பத்துடன் இணைய இருக்கிறார்கள். 

இதற்கிடையே 2ஆவது கட்டமாக 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர்.

இதனால் உயிருடன் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர்.

போர் நிறுத்த நடவடிக்கைகள் தொடங்கி இருப்பது இரு நாட்டு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் தனது மகளுக்கு 3 வயதாக இருக்கும் போது தந்தையை இஸ்ரேலிய ராணுவம் சிறைபிடித்து பணயக்கைதியாக 22 வருடங்கள் வைத்திருந்திருக்கிறது. 

போர் நிறுத்தத்தின் பின் பணயக் கைதிகள் பரிமாற்றத்தின் மூலம் விடுதலை செய்யப்பட்ட அவர் 25 வயதான மகளை 22 வருடங்களின் பின் பாசம் பொங்க கட்டியணைத்த காட்சி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

இதேபோல் இஸ்ரேலிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது நபர் ஒருவரிடம் உனது முழுக்குடும்பமும்  கொல்லப்பட்டதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர்.  

நேற்று அவர் காசாவில் உள்ள தனது வீட்டின் படிக்கட்டுகளில் ஏறும்போது ​​அவரது மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் உயிருடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியில் அவர்களை கட்டியணைத்து அழும் காட்சியும் வெளியாகி மனதை நொறுங்கச் செய்துள்ளது.

Radio