காசாவுக்கு செல்வது பெருமையாக உள்ளது -டிரம்ப்

எகிப்தில் நடைபெறும் காசா அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு வந்துள்ளார். இஸ்ரேலில் தரையிறங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலஸ்தீன பிரதேசமான காசாவுக்குச் செல்வது தனக்கு பெருமையாக இருக்கும் என்று கூறினார். பிபிசி அறிக்கையின்படி, டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 13) உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு சற்று முன்னதாக நாட்டின் பென் குரியன் விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
தரையிறங்குவதற்கு முன்பு ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காசாவுக்குச் செல்வதில் பெருமைப்படுவேன் என்றார்.காசாவுக்குச் செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, டிரம்ப், "நான் அங்கு சென்றதில்லை என்றாலும் அந்த இடத்தை நன்றாக அறிவேன். நான் அங்கு செல்ல விரும்புகிறேன், குறைந்தபட்சம் அங்கு கால் வைக்க விரும்புகிறேன்" என்றார்.




