பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போரையும் நிறுத்துவேன்- டிரம்ப் தெறிவிப்பு

இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அங்கிருந்து எகிப்து செல்கிறார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "போர்களைத் தீர்ப்பதில் சிறந்தவன் நான். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நடப்பதாக கேள்விப்பட்டேன். மத்திய கிழக்கு பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பியதும், அதையும் நிறுத்துவேன். காசா போர் என்பது நான் தீர்த்து வைத்த 8வது போராகும்" என்று தெரிவித்தார்.




