பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு;வெளியான தகவல்

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் நாட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் எல்லைப் பாதைகளை மூடியதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில் ,எல்லை மூடல் குறித்து காபூலில் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் இல்லை. இன் நிலையில் குறித்த சண்டையில் 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றதாக, ஆப்கானிஸ்தான் படையினர் கூறியுள்ளனர்.
முன்னதாக, நேற்று சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் எல்லைச் சாவடிகள் மீது ஆப்கானிஸ்தான் துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இது வார தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக, இந்த தாக்குதல் நடந்ததாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, துப்பாக்கி மற்றும் எறிகனை தாக்குதல்கள் மூலம் பதிலளித்ததாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சண்டையில், 20 ஆப்கானிஸ்தான் துருப்புக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள்அறிவித்தனர்.
எனினும் நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுடன் 2,600 கிமீ நீள எல்லையைக் கொண்டுள்ளது.




