SuperTopAds

மெக்சிகோவில் கனமழை-பலர் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor IV
மெக்சிகோவில் கனமழை-பலர் உயிரிழப்பு


மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக மத்திய மாநிலமான ஹிடால்கோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதுடன், 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பியூப்லா மாநிலத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேரை காணவில்லை.

மேலும் கனமழையால் சுமார் 80 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 கடற்படை 900 மக்களை வெளியேற்றி, முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Radio