ஈபிள் கோபுரம் இடிக்கப்பட போகிறதா-வெளியான உண்மை நிலவரம்


பிரான்சில் ஈபிள் கோபுரம் இடிக்கப்படப்போவதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்
கடந்த 2ஆம் திகதி ஈபிள் கோபுரம் மூடப்பட்டதைத் தொடர்ந்து குறித்த போலிச் செய்திகள் சமூக ஊடகங்களில் அதிகமாக பரவல் ஆகின .
குறித்த கோபுரம் 2026ஆம் ஆண்டுடன் இடிக்கப்பட இருப்பதாகவும் அதனால் கோபுரத்தை இறுதியாக பார்க்க நினைப்பவர்கள் பார்த்துக்கொள்ளுமாறும் செய்திகள் வெளிவந்தன.
இந்த சிறப்பு பெற்ற ஈபிள் கோபுரத்தை காண தற்போது யாரும் வருவதில்லை என்பதே இதற்கான காரணமாக கூறப்பட்டது
எனினும், ஈபிள் கோபுரத்தை நிர்வகித்துவரும் 'SETE' அமைப்போ பரிஸ் நகரத்தின் கலாசார அமைப்புக்களோ இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இதிலிருந்து, ஈபிள் கோபுரம் இடிக்கப்படப்போவது குறித்து வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரியவருகின்றது.




