SuperTopAds

காசா அமைதி உச்சி மாநாட்டில் :அமெரிக்க - எகிப்திய ஜனாதிபதிகள் தலைமை வகிப்பு

ஆசிரியர் - Editor IV
காசா அமைதி உச்சி மாநாட்டில் :அமெரிக்க - எகிப்திய ஜனாதிபதிகள் தலைமை வகிப்பு


காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோர் நாளை திங்கட்கிழமை ஷார்ம் எல்-ஷேக்கில் நடைபெறும் காசா அமைதி உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்குவார்கள் என எகிப்திய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த  மாநாடு, இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறும் என, எகிப்திய ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது.

மேலும் இந்த மாநாடு, காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஸ்திரத்தன்மையின் புதிய சகாப்தத்தை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

 இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோரும், இதில்  கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.


மேலும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் தனது வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.


இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஷார்ம் எல்-ஷேக் மாநாட்டுக்கு செல்வாரா? என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை, அதே நேரத்தில் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Radio