SuperTopAds

திடீரென ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்த விமானம் மூவர் உயிரிழப்பு வெளியான தகவல்

ஆசிரியர் - Editor IV
திடீரென ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்த விமானம் மூவர் உயிரிழப்பு வெளியான தகவல்

அவுஸ்திரேலியாவில் சிறியரக விமானமொன்று தீப்பிடித்து விபத்துள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது .

இந்த விபத்து சம்பவத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது 

அவுஸ்திரேலியாவின் ஷெல்ஹார்பர் விமான நிலையத்திலுள்ள சிறியரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . 

இதையடுத்து, உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைத்துள்ளனர் இருப்பினும் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

விமானம் போதுமான உயரத்தை அடையத் தவறியதால், விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

Radio