SuperTopAds

தென் அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை

ஆசிரியர் - Editor IV


தென்அமெரிக்காவின் தெற்கு முனைக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையிலான நீர்ப் பகுதியான டிரேக் பாஸேஜை 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலநடுக்கமானது நேற்றையதினம் மாலை உள்ளூர் நேரப்படி 5.29 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையிலான தொலைதூர நீரில் அமைந்துள்ளது.

இதனிடையே குறித்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது.

அத்துடன் சிலிக்கு சுனாமி அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது.

Radio