SuperTopAds

போர் நிறுத்தத்தை கொண்டாடும் காசா மக்கள்...

ஆசிரியர் - Editor IV
போர் நிறுத்தத்தை கொண்டாடும் காசா மக்கள்...


அக்டோபர் 2023 இல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் 2 வருடங்கள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் -இன் முயற்சியால் முடிவுக்கு வர உள்ளது.

பணய கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட டிரம்ப் உடைய 20 அம்ச அமைதி திட்டத்தை ஹமாஸ் அமைப்பும் , இஸ்ரேலும் ஏற்றுக்கொண்ட நிலையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இன்று இந்த போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சவரையும் ஒப்புதல் வழங்கிவிட்ட நிலையில் போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்  காசாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறும். இஸ்ரேலியக் காவலில் உள்ள பாலஸ்தீனக் கைதிகள் திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள். ஹமாஸ் காவலில் உள்ள மீதமுள்ள இஸ்ரேலியக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள்.

இதனால் பணய கைதிகள் விடுதலையை எதிர்கொக்கும் இஸ்ரேலியர்களும், தினந்தோறும் நிகழும் தாக்குதல்களில் இருந்து விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை பெற்ற காசா மக்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2 வருடங்களில் நடந்த இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காசாவில் 67,200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐநா கூறுகிறது. இதற்கிடையே உணவுப் பொருட்களை இஸ்ரேல் நிறுத்தி வைத்ததன் காரணமாக 200 க்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

அண்மையில் காசா சுகாதர அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2 வருட காசா இனப்படுகொலையில் 20,179 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.


Radio