SuperTopAds

முதன்முறையாக ஒப்புக்கொண்டார் புடின்- சுட்டுவீழ்த்தப்பட்ட அஜர்பைஜான் விமானம்...

ஆசிரியர் - Editor IV

தங்கள் நாட்டு வான் பாதுகாப்பு ஏவுகணைதான் கடந்த டிசம்பரில் அஜர்பைஜான் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல் முறையாக ஒப்புக்கொண்டார்.


தஜிகிஸ்தான் தலைநகர் துஷாம்பேயில் நடைபெற்ற முன்னாள் சோவியத் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவர், அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுடன் நடந்த சந்திப்பின்போது இதனைத் தெரிவித்தார்.

அஜர்பைஜான் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம், பாகு நகரிலிருந்து ரஷ்யாவின் செச்னியா குடியரசு தலைநகர் க்ரோஸ்னிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் திகதி சென்றபோது, வழியில் விபத்துக்குள்ளானது.


ரஷ்ய வான்பாதுகாப்பு ஏவுகணையின் தவறுதலான தாக்குதலால் விமானம் சேதமடைந்து, மேற்கு கஜகஸ்தானில் தரையிறங்க முயன்றபோது விழுந்து சேதமடைந்ததாக அஜர்பைஜான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 67 பயணிகளில் 38 பேர் உயிரிழந்தனர். எனினும், இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாக ரஷ்யா மீது அஜர்பைஜான் குற்றஞ்சாட்டிவந்தது.

இந்தச் சூழலில், துஷாம்பேயில் அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவிடம் ‘இது ஒரு பரிதாபகரமான நிகழ்வு’ என்று கூறிய விளாடிமிர் புடின், இது தொடர்பாக மன்னிப்பு கோரினார்.

Radio