இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை- ஸ்டெல்த் போர் விமானம்: 2028ல் பறக்கவிருக்கும் “AMCA

இந்தியா, உலகின் முன்னணி ஸ்டெல்த் போர் விமானங்களுடன் போட்டியிடத் தனது சொந்தஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கி வருகிறது.
மேம்பட்ட நடுத்தர போர் விமானம் எனப்படும் இந்த விமானம், இந்தியாவின் முதல் உள்நாட்டு ஐந்தாம் தலைமுறை போர் விமானமாகும்.
இந்த இரட்டை எஞ்சின், ஒற்றை இருக்கை, ,பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) கீழ் உள்ள ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA) யால் உருவாக்கப்படுகிறது.
இது மேம்பட்ட ஸ்டெல்த் திறன், சூப்பர் குரூஸ் செயல்பாடு மற்றும் அதிநவீன ஏவியோனிக்ஸ் தொழில்நுட்பத்துடன் வானில் அதிவேகமாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம், பிரெஞ்சு விண்வெளி நிறுவனம் சஃப்ரான் (Safran) உடன் இணைந்து உருவாக்கப்படும் 120 கிலோநியூட்டன் (kN) டர்போஃபேன் எஞ்சினால் இயக்கப்படும்.
இந்த எஞ்சின், AMCA-வுக்கு அதிக சுமைச் சுமக்கும் திறன், விறுவிறுப்பான இயக்கம் மற்றும் சூப்பர் குரூஸ் வேகம் ஆகியவற்றை வழங்கும்.சஃப்ரானுடன் ஏற்பட்டுள்ள கூட்டாண்மை, இந்தியாவின் பாதுகாப்பு தன்னிறைவு முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
AMCA-வின் திறன்கள், அமெரிக்காவின் F-35, சீனாவின் J-20 மற்றும் ரஷ்யாவின் Su-57 போன்ற உலகளாவிய ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுடன் ஒப்பிடப்படுகின்றன.
இவை ஏற்கனவே சேவையில் இருக்கும் நிலையில், AMCA தற்போது வளர்ச்சிப் பணியில் உள்ளது.
முதல் சோதனைப் பறப்பு 2028ல் நடைபெறும் என்றும், 2034க்குள் இந்திய விமானப்படையில் (IAF)சேர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
80 முதல் 100 மில்லியன் அமெரிக்க டாலர் (₹670 – ₹830 கோடி) வரை மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம், உலகளாவிய ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களில் மிகச் சிக்கனமான
ஒன்றாக AMCA உருவாகும் வாய்ப்புள்ளது.“F-35க்கு இந்திய பதில்” என அழைக்கப்படும் AMCA, இந்தியாவின் விண்வெளி–பாதுகாப்பு துறையில் வரலாற்றுச் சாதனையாக அமைவுள்ளது.
இது பறக்கத் தொடங்கும் 2028ம் ஆண்டு, இந்தியாவின் வான்வெளி தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு புதிய யுகத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




