SuperTopAds

பௌத்த மத விழாவில் குண்டு வெடிப்பு-மியான்மரில் அதிர்ச்சி...

ஆசிரியர் - Editor IV
பௌத்த மத விழாவில் குண்டு வெடிப்பு-மியான்மரில் அதிர்ச்சி...

மத்திய மியான்மரில் பௌத்த பண்டிகையைக் கொண்டாட கூடியிருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 47 பேர் காயமடைந்துள்ளனர்.

தேசிய விடுமுறை மற்றும் பௌத்த வேர்களைக் கொண்ட தாடிங்யுட் பண்டிகையைக் கொண்டாட திங்கட்கிழமை மாலை, சாங் யூ டவுன்ஷிப்பில் சுமார் 100 பேர் கூடியிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் மூலம் இயங்கும் பாராகிளைடர் ஒன்று கூட்டத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசியதாக இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் பாதுகாப்புப் படையின் கீழ் உள்ள உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அங்கு கூடியிருந்தவர்கள் இராணுவ ஆட்சிக் குழுவின் கொள்கைகளுக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்திலேயே கூட்டத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

குறிப்பாக மெழுகுவர்த்தி ஏந்தி நடைபெற்ற போராட்டத்தில், மக்கள் இராணுவ ஆட்சிக்குழுவின் இராணுவ ஆட்சேர்ப்பு மற்றும் வரவிருக்கும் தேர்தலை எதிர்த்தனர். அதே நேரத்தில் ஆங் சான் சூகி மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமது ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதேவேளை சம்பவ தினமன்று வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகவும், தங்கள் போராட்டத்தை விரைவாக முடிக்க முயன்றதாகவும் ஆனால் பாராமோட்டர்கள் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே சம்பவ இடத்தை அடைந்து தாக்குதலை மேற்கொண்டதாகவும் மக்கள் பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio