SuperTopAds

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை

ஆசிரியர் - Editor IV
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூ கினியாவின் மொரோப் மாகாணத்தில் உள்ள லே அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம், இன்று உள்ளூர் நேரப்படி 9:05 மணிக்கு ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம், சாலமன் கடலில் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் மையம் கிம்பே நகரத்திற்கு தென்கிழக்கே சுமார் 194 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இதனிடையே குறித்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு ஆரம்பத்தில் சுனாமி அச்சுறுத்தல் எச்சரிக்கையை வெளியிட்டு, "சில கடற்கரைகளில் ஆபத்தான சுனாமி அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன"எனவும் அறிவித்திருந்தது.

இதேவேளை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Radio