SuperTopAds

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம்-வெளியான அதிர்ச்சி தகவல்

ஆசிரியர் - Editor IV
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம்-வெளியான அதிர்ச்சி தகவல்

ஜப்பானின் ஹொன்ஷுவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நேற்றையதினம் இரவு சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

கிழக்கு கடற்கரைக்கு அருகில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி அபாய எச்சரிக்கை எவையும் விடுக்கப்படவில்லை  என்பதுடன் நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்புகள் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Radio