SuperTopAds

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்புடின் அமெரிக்காவிற்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை...

ஆசிரியர் - Editor IV
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்புடின் அமெரிக்காவிற்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை...

ரஷ்யா  மற்றும் அமெரிக்கா  உறவு மோசமாகிவிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீண்ட தூரம் தாக்கும் டோமஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க வழங்கினால் இவ்வாறான சூழல் உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா உள்பட 140 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் நிபுணர்கள் பங்கேற்ற கூட்டம் ரஷ்யாவின் சோச்சி நகரில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் அனைத்தும் இந்தப் போரில் ஈடுபட்டுள்ளன.

அவர்கள் அனைவரும் எதிர்த்து ரஷ்யா போரிட்டு வருகின்றது.

மெதுவாக முன்னேறுகின்றது, முன்னேறிய இடங்களில் வலுவாக நிலைகொண்டுள்ளது உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Radio