SuperTopAds

"இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைவாய்ப்பு"-வெளியான முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் - Editor IV

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் அனைத்தும் போலியானவை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் சில தனிநபர்கள் மற்றும் குழுக்கள், “இஸ்ரேலில் விவசாய வேலை” எனும் பெயரில் வேலை தேடுபவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் இவ்வாறான தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக பணியகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது,

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலமே வழங்கப்படும்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் தனிநபர் விளம்பரங்கள் அனைத்தும் மோசடி முயற்சிகள்.

வேலை தேடுபவர்கள் இத்தகைய வஞ்சக விளம்பரங்களுக்கு ஏமாறக்கூடாது.

மேலும், போலியான விளம்பரங்களை வெளியிடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பணியகம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கை, வேலை வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சமூக ஊடகங்களில் வெளிநாட்டு வேலை விளம்பரங்களை நம்பி மோசடிக்கு உள்ளாகாமல் இருக்க வலியுறுத்தும் முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.