SuperTopAds

அமெரிக்க H-1B விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்: வெளியான அறிவிப்பு

ஆசிரியர் - Editor IV
அமெரிக்க H-1B விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்: வெளியான அறிவிப்பு

அடுத்த ஆண்டு பெப்பரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா  நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் (Howard Lutnick) தெரிவித்துள்ளார்.

ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூபாய் 1.47 லட்சத்தில் இருந்து ரூபாய் 88 லட்சமாக உயர்த்தும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையொப்பமிட்டார்.

ஒருமுறை மட்டுமே செலுத்தக் கூடிய இந்த கட்டணம் 2026 ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவர்கள் உள்பட செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பிறகு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முன்பாக விண்ணப்பித்தவர்கள், புதுப்பிப்பதற்காக விண்ணப்பத்தை சமர்ப்பித்தவர்கள் மற்றும் அமெரிக்காவில் மீண்டும் நுழையும் ஹெச்-1பி விசாதாரர்களுக்கு இந்தப் புதிய கட்டணம் பொருந்தாது என அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், ஹெச்-1பி விசா கட்டண உயர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைமுறையாகவுள்ளது.

அதற்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தப் புதிய கட்டணத்தை ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதும். 1990-களில் ஹெச்-1பி விசா நடைமுறை உருவாக்கப்பட்டது.

இந்த விசாவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் லாட்டரி முறையில் (குலுக்கல் முறை) தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

திறன்வாய்ந்த பணியாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை.

அந்த விசாவுக்கு ஒதுக்கப்பட்ட விண்ணப்பங்களைவிட ஏழு முதல் பத்து மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

அதில் 74 சதவீதம் தொழில்நுட்பத் துறையில் பணிவாய்ப்பை பெறுபவர்களாவர் அத்தோடு, நான்கு சதவீத விசாக்களை மட்டுமே கல்வியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பெறுகின்றனர்.

கல்வியாளர்களும் மருத்துவர்களும் அதிக அளவில் அமெரிக்கா வர வேண்டும் ஆனால் பொறியாளர்களை மட்டுமே நிறுவனங்கள் பணியமர்த்த விரும்பினால் அவர்களில் அதிகம் சம்பளம் பெறுவோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

குறைந்த சம்பளம் உடையோர் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் இதுவே என்னுடைய நிலைப்பாடு அத்தோடு ட்ரம்ப்பும் இதை ஒப்புக்கொண்டுள்ளார்.

குறைந்த சம்பளத்துக்கு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினரையும் அமெரிக்கா அழைத்து வருவது தவறு இதை அனுமதிக்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.

Radio