மியான்மரில் திடீர் நிலநடுக்கம்- வெளியான அதிர்ச்சி தகவல்

இந்திய-மியான்மர் எல்லைக்கு அருகே இன்று அதிகாலை 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது
இந்நிலநடுக்கமானது அசாம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கம் 15 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக நாகாலாந்தின் வோக்காவிலிருந்து தென்கிழக்கே 155 கி.மீ தொலைவிலும், திமாபூருக்கு தென்கிழக்கே 159 கி.மீ தொலைவிலும், மோகோக்சுங்கிலிருந்து தெற்கே 177 கி.மீ தொலைவிலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது பல மாநிலங்களில் வசிப்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இருப்பினும் அது சில வினாடிகள் மட்டுமே நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதலில் மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மியான்மர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனிடையே குறித்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதவிபரங்கள் மற்றும் இழப்புக்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




