இன்றைய தங்கசந்தை நிலவரம்

கடந்த சில நாட்களாக சற்று குறைவடைந்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்றையதினம் மீண்டும் உயர்ந்துள்ளதாக தங்க சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் இன்றையதினம், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,150,141 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 40,580 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 324,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 37,200 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 297,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,510 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 284,100 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 303,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 280,300 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




