SuperTopAds

காரை திருடி அடகு வைத்து பெற்ற பணத்தில் , புதுமோட்டார் சைக்கிள் வாங்கி காதலியுடன் சுற்றுலா சென்ற இளைஞன் கைது

ஆசிரியர் - Editor II
காரை திருடி அடகு வைத்து பெற்ற பணத்தில் , புதுமோட்டார் சைக்கிள் வாங்கி காதலியுடன் சுற்றுலா சென்ற இளைஞன் கைது

கண்டியில் சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை திருடி, அதனை அடகு வைத்துப் பெற்ற பணத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி தனது காதலியுடன் சுற்றுலா சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாத்தளை, மாதிபொல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் கண்டி - டி.எஸ். சேனாநாயக்க வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி இரவு, டி.எஸ். சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள வாகன விற்பனையகம் ஒன்றுக்குள் நுழைந்த சந்தேகநபர், அங்கிருந்த டொயோட்டா நோவா ரக கார் ஒன்றையும் அதற்கான ஆவணங்களையும் திருடிச் சென்றுள்ளார்.

திருடப்பட்ட அந்த வாகனத்தை, மாத்தளை, பல்லேபொல பகுதியில் உள்ள அடகு மையத்தில் 15 இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்து, அந்த பணத்தில் நவீன ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்தநிலையில், தாம் பணிபுரிந்த அதே உணவகத்தில் பணியாற்றிய தனது காதலியுடன் அந்த மோட்டார் சைக்கிளியில் பயணித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர் 

Radio