SuperTopAds

கொழும்பில் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய ரவிகரன் எம்.பி.

ஆசிரியர் - Editor II
கொழும்பில் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய ரவிகரன் எம்.பி.

தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கொழும்பில் தியாகதீபம் திலீபனுக்கு  இன்று இறுதிநாள் அஞ்சலிகளை செலுத்தினார். 

தற்போது செப்டெம்பர் மாதத்திற்கான இரண்டாவது மாதாந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெற்றுவருகின்றன.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கொழும்பில் தங்கியுள்ள நிலையிலேயே அவரால் கொழும்பில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

 தியாகதீபம் திலீபனின் திருஉருவப் படத்திற்கு சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Radio