மாணவியை துஸ்பிரயோகம் செய்த பாடசாலை வேன் சாரதி - நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை

கொழும்பில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆம் வகுப்பு மாணவியை தனது வாகனத்திற்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக, ஒரு குழந்தையின் தந்தையான பாடசாலை வேன் சாரதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது
அத்துடன் குற்றவாளிக்கு 30,000 ரூபா அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு 5 இலட்ச ரூபா இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டது.
கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பாடசாலையில் 4ஆம் வகுப்பில் படித்து வந்த சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தது உட்பட இரண்டு குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சட்டதரணிகளால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வயதைக் கருத்தில் கொண்டு சிறிய தண்டனை விதிக்க வேண்டும் என்ற பிரதிவாதியின் வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி இந்த தண்டனையை விதித்தார்.
சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, சிறுமியை இனிப்புகளால் கவர்ந்து, மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்ததாகவும் அரச சட்டதரணிகள் தெரிவித்தனர்.
இந்தக் குற்றம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும் என்று நீதிபதி கூறினார்.




