மின்சார சபை ஊழியர்களால் கொழும்பில் போக்குவரத்து நெரிசல் - குவிக்கப்பட்ட பொலிஸார்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள் மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, தலைமை அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொம்பனித் தெருவில் இருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.







