SuperTopAds

ரணிலை அவசரமாக சந்தித்த சீன தூதுவர் - கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஆசிரியர் - Editor II
ரணிலை அவசரமாக சந்தித்த சீன தூதுவர் - கொழும்பு அரசியலில் பரபரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி செங் ஹாங்கிற்கும் இடையில் கொழும்பு புளவர் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இலங்கை மற்றும் சர்வதேச மட்டத்திலான அரசியல் நிலைமைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்கும் சீனத் தூதுவருக்கும் இடையிலான கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கொழும்பில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சீனத் தூதுவருடன் இதேபோன்ற கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். 

சீனத் தூதுவர் எதிர்காலத்தில் மற்றொரு பிரபல முன்னாள் அரசியல்வாதியுடனும் கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.