மத்தியஸ்த சபைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான 3 பிரதேச செயலகங்களில் நேர்முகப்பரீட்சை முன்னெடுப்பு

மத்தியஸ்த சபைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான 3 பிரதேச செயலகங்களில் நேர்முகப்பரீட்சை முன்னெடுப்பு
அம்பாறை மாவட்டம் கல்முனை, சாய்ந்தமருது ,சம்மாந்துறை , பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலங்கை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் மத்தியஸ்த சபைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை பிரதேச செயலக கட்டடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (9) காலை முதல் புதன்கிழமை(10) மாலை வரை 2 தினங்களாக இடம்பெற்றது.
முதலில் கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார் வழிகாட்டலில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பழீல் உட்பட இலங்கை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் வை.கே. சௌம்ய சம்பத் பண்டார யட்டிவெல்ல, மத்தியஸ்த சபையின் மட்டு -அம்பாறை மாவட்ட பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். ஆஸாத், இலங்கை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஐ . ராசித் அப்துல்லா, ஐ. ஜே.எப். நஸீஹா ஆகியோர் மத்தியஸ்த சபைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சையில் கலந்து கொண்டிருந்ததுடன் இலங்கை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் கல்முனை பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எவ்.எஸ்.எஸ்.ஹசன் மற்றும் கல்முனை உப பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியாகத்தர் கந்தசாமி அருட்பிரசாந்தன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நேர்முகப்பரீட்சை முன்னெடுக்கப்பட்டன..
அதே போன்று சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட மத்தியஸ்த சபைக்கான நேர்முகப்பரீட்சை தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கீழ் இணைக்ககப்பட்டுள்ள மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியாகத்தர் எ. எல். மாஜிதா பேகம் ஒருங்கிணைப்பில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம். என். எம். றம்சான் பங்கேற்புடன் பிற்பகல் பிரதேச செயலக கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலங்கை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் மத்தியஸ்த சபைக்கான நேர்முகப்பரீட்சையானது இலங்கை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் பிரதேச செயலகத்தின் கீழ் இணைக்ககப்பட்டுள்ள மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியாகத்தர் ஏ.எல்.றினோசா ஒருங்கிணைப்பில் சம்மாந்துறை நிர்வாக உத்தியோகத்தர் ஜெ.எம் ஜெமீல் பங்கேற்புடன் பிரதேச செயலக கட்டடத்தில் நடைபெற்று நிறைவடைந்துள்ளன.
இந் நேர்முகப்பரீட்சைக்கு பட்டதாரிகள் மற்றும் சமூக மட்டங்களில் சேவையாற்றுவோர் என பலர் விண்ணப்பித்திருந்தனர்.குறித்த நேர்முக தேர்விற்கு சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் இதில் சித்தியடைவோரில் இருந்து தவிசாளர் உப தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு வசதியான மத்தியஸ்த சபை ஊடாக பிணக்கு முறைப்பாடு ஏற்றுக்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்துகிறமை சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.





























