அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
பாடசாலைகளில் கடமைபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைப்புச் செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ‘எங்கள் விடயத்தில் தவறு இழைக்கும் அரசு நீதியை பெற்றுத் தருமாரு’, ‘ஐந்து வருடங்களாக பாடசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைப்பு செய்யப்பட்டு ஆசிரியர்களாக பணியாற்றுகின்ற எங்களுக்கு நீதி வேண்டும்’ போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















