இன்று முதல் சட்டப்படி வேலை போராட்டம்!

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று இரவு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் ஊழியர்களின் பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.




