SuperTopAds

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற கோர விபத்து ; உடல் நசுங்கி இருவர் பலி..!

ஆசிரியர் - Editor II
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற கோர விபத்து ; உடல் நசுங்கி இருவர் பலி..!

மத்திய அதிவேக வீதியில் 91ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோதுமை மா ஏற்றி வந்த லொறியொன்றும் பவுசர் வாகனமொன்றும் மோதிக்கொண்டதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் லொறி சாரதி, உதவியாளர் ஆகிய இருவருமே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.