SuperTopAds

தமிழ் மக்களின் 5ஆயிரம் காணி அனுமதி பாத்திரங்கள் அரசாங்கத்திடம் - காணி உறுதிகள் இன்றி திண்டாடி வரும் வடக்கு மக்கள்

ஆசிரியர் - Editor II
தமிழ் மக்களின் 5ஆயிரம் காணி அனுமதி பாத்திரங்கள் அரசாங்கத்திடம் - காணி உறுதிகள் இன்றி திண்டாடி வரும் வடக்கு மக்கள்

வடக்கு மக்களின் சுமார் 5 ஆயிரம் காணி அனுமதி பத்திரங்களை ( பொமிற்) அழிப்பு உறுதிகளாக மாற்றுவதற்காக கொழும்பிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்னமும்  குறித்த பத்திரங்கள் உறுதிகளாக மாற்றி மக்களுக்கு வழங்கப்படவில்லை.

2024 ஆம் வருடத்திற்கான வரவுசெலவுத்திட்ட உரைக்கு அமைய அனுமதிப்பத்திரங்கள் மற்றும் அழிப்புப்த்திரங்கள் உடைய காணிகளுக்கு உறுமய திட்டத்தின் கீழ் நிபந்தனைகள் அற்ற பூரண அழிப்பு வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கடந்த  2024 தை மாதத்திலிருந்து ஆவணி மாதம் வரையில் நான்கு கட்டங்களாக உறுமய உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட போதும் வடக்கில் சுமார் 5 ஆயிரம் காணி அனுமதி பத்திரங்கள் உறுதியாக மாற்றுவதற்காக  பிரதேச செயலாளர்கள் ஊடாக கொழும்பு காணித் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்னமும் அவை உறுதிகளாக மாற்றப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படவில்லை.

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஒரு வருடம் நெருங்கும் நிலையில்  எந்தவொரு உறுதிப்பத்திரங்களும் மக்களிடம் மீள வழங்கப்பட்வில்லை.

யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்கள் பல தசாப்தங்களாக பல சவால்களை எதிர்கொண்டு காணிக்கான ஆவணங்கள் அனைத்தும் அழிவடைந்து தற்போது பல கட்டங்களாக பல விசாரணைகளின் மத்தியில் தமது காணிகளை   பெற்றுக் கொண்ட நிலையிலும் அனுமதிப்பாத்திரங்கள் தம்வசம் இல்லாமல் இருக்கும் நிலை காணப்படுகிறது.

உறுமய திட்டத்தின் கீழ் அரசிற்கு ஒப்படைத்து காணி பதிவகத்தில் பதிவுகளும் இரத்துச்செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது எவ்வித ஆவணங்களும் இல்லாமையால் பிள்ளைகளுக்கு வழங்கவோ, நிதி தேவைக்கு கடன்களை கூட காணி உறுதிகளை பொறுப்பாக கொடுத்து பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .

மேலும் காணி உறுதியை ஒப்படைத்தவர்கள் மரணமடைவதால் உரிமை தொடர்பில் பிணக்குகள் ஏற்பட்டு கடந்த காலத்திற்கு பின்னோக்கி நகரும் நிலையே காணப்படுகின்றது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து ஓர் வருடத்தினை நெருங்கும் போதும் அரசாங்கம் மக்களிடம் இருந்து  பெற்றுக்கொண்ட காணி ஆவணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. 

அதனால் ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் செலுத்தி , காணி உறுதியை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Radio