மோட்டார் சைக்கிளில் சென்றவர் அடித்துக் கொலை - கடற்படை சிப்பாய் கைது

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை வழி மறித்து தாக்கியதில் , தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை , வீதியில் வழிமறித்து கடற்படை சிப்பாய் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான 59 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தாக்குதலாளியான 26 வயதுடைய கடற்படை சிப்பாயை கைது செய்துள்ளனர்.
முன் பகை காரணமாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




