SuperTopAds

ஏழுமாத காலத்திற்குள் வீதி விபத்துக்களால் 1700 பேர் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
ஏழுமாத காலத்திற்குள் வீதி விபத்துக்களால் 1700 பேர் உயிரிழப்பு

கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் சுமார் 1605 வீதி விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் அதன்  காரணமாக 1700 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பொலிஸ் முறைப்பாடு இல்லாமல் சம்பவ இடத்தில் சமரசமாகத் தீர்த்துக் கொள்ளப்பட்ட வீதி விபத்துக்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டின் 12 மாத காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழந்த மொத்த எண்ணிக்கையான 1503 ஆகும். அந்நிலையில் இந்த ஆண்டின் ஏழு மாத காலப்பகுதிக்குள்ளாகவே 1700 பேர் உயிரிழந்துள்ளனர்

தூக்கம், களைப்பு காரணமான அசதி அல்லது போதைப் பழக்கம் போன்றவையே பெரும்பாலான வீதி விபத்துக்களின் காரணமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio