பொதுப் போக்குவரத்தினை சீரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்

பொதுப் போக்குவரத்தினை சீரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்
பொதுப்போக்குவரத்தினை கல்முனை மாநகரத்தினுள் சீரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலானது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம் இப்னு அன்சார் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு வீதிகளில் உள்ள அனுமதியற்ற வியாபார கொட்டில்கள் இ பாதை இரு மருங்குகளில் அமைந்துள்ள தற்காலிக கடைகள் மற்றும் பாதுகாப்பு அற்ற முறையில் வீதியில் வைத்து விற்பனை செய்கின்ற நபர்கள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டன.
குறித்த பொதுப் போக்குவரத்து கல்முனை மாநகரில் சீரின்மை கட்டாக்காலிகளின் தொல்லை தொடர்பில் தொடர்ந்தும் பொதுமக்களாலும் முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளன.இது தவிர பாடசாலை அதிபர்களாலும் இது சம்பந்தமாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் இவ்விடயம் சம்பந்தமாகவும் உரிய வியாபாரிகளிடம் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதுடனன் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து இவற்றை அகற்றும் முன் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் என்பன இக்கலந்துரையாடலில் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மற்றும் நிர்வாகப்பிரிவு உள்ளிட்ட பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக், சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான வாஹிட் , மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி நஸீர் ,சுற்றுச் சூழல் பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான எம்.ரி.எம்.நஜீம், உள்ளிட்டோர் பொலிஸ் தரப்பில் கலந்து கொண்டனர்.
அத்துடன் குறித்த விடயங்களை ஆராயும் பொருட்டு கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்சான், கல்முனை உப பிரதேச செயலகத்தின் கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அமலதாசன், வீதி அபிவிருத்தி அதிகார சபை , வீதி அபிவிருத்தி திணைககள அதிகாரிகள், கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை ,கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை சார்பான அதிகாரிகள் ,சுகாதார பிராந்திய அதிகாரிகள், கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ,கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது , பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இக்கலந்துரையாடலின் போது கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் நடமாட்டத்திற்கு பாதசாரிகளின் இடையூறு ஏற்படுத்தும் வியாபாரிகளை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தல் வியாபார பொருட்கள் மற்றும் வியாபார தளங்களின் விளம்பர பலகைகளை வீதிகளில் வைத்து பொதுப்போக்குவரத்தினை தடுப்பதற்கான சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தல் வாகனங்களை நீண்ட நேரமாக வீதிகளில் இரு மருங்கிலும் நிறுத்தி வைத்தல் மற்றும் வீதிகளில் வைத்து வாகனங்களை திருத்த வேலை செய்யும் நபர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுத்தல் உணவுப் பொருட்களையும் மற்றும் பழ வகைகளையும் பாதுகாப்பற்ற முறையில் திறந்த நிலையில் விற்பனை செய்பவர்களை இனங்கண்டு வழக்க பதிவு செய்தல் கால் நடைகளை பாதுகாப்பற்ற நிலையில் வீதிகளில் நடமாட விடும் உரிமையாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல் உணவகங்களின் ஊடாக வெளியேற்றும் கழிவு நீரினை வீதிகளில் விடும் உணவக உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்தல் குறித்தும் ஆராயப்பட்டன.
இவ்வாறான குற்ற செயல்களை தொடர்ச்சியாக செய்து வருவதால் பொதுமக்கள் பலவகையான சிரமங்களை எதிர் கொளகின்றார்கள். ஆகையால் இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் பொதுமக்கள் சிரமங்கள் அசௌகரியங்களிலிருந்தும் பயணிப்பதற்கும் தற்போது நமது நாட்டில் களவு கொள்ளைகள் இடம் பெறுவதை தடுப்பதற்காக தங்களின் பாதுகாப்புக்கு என வீட்டிலும் வியாபார நிலையங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் சீ.சீ.டீவி கேமராக்களை உரிய முறையில் செயற்படுதா என்பதனையும் பரீட்சித்து நடைமுறையில் வைத்து கொள்ளுமாறும் உதவுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.


































