SuperTopAds

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்

ஆசிரியர் - Editor III
கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி   மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்

 இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி   மற்றும் மனைவியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 அந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

கடந்த திங்கட்கிழமை  (18) மாலை அம்பாறை மாவட்டம்  பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற  நீதிபதியின்  வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில்  இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில்  கல்முனை  குவாஷி நீதிமன்ற  நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும்  இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


இதன்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரிகளிடம்  பாதிக்கப்பட்ட  நபர் ஒருவரிடம்   வழக்கு ஒன்றிற்காக  ரூபா 2300   பணம்  இலஞ்சமாக கேட்கப்படுவதாக   முறைப்பாடு ஒன்று  மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய இன்று மாறுவேடத்தில்  மருதமுனை பகுதியில் இயங்கி வந்த குவாஷி நீதிமன்ற  நீதிபதியின்  வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் அருகில்   மாறு வேடத்தில் காத்திருந்து  இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள்    நீதிபதி மற்றும் மனைவியை  கைது செய்தனர்.

இதன் போது ரூபா கைது செய்யப்பட்ட சந்தெக நபர்கள்  2300 ரூபாவினை  இலஞ்சமாக பெற்றுள்ளதாக  ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்ததுடன் சந்தேக நபர்கள் இன்று(19) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் மன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி   மற்றும் மனைவியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 அந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட  சிரேஷ்ட சட்டத்தரணியும் அகில இலங்கை சமாதான நீதிபதியுமான மருதமுனையைச் சேர்ந்த பளீல் மௌலானா அமீருல் அன்சார் மௌலானா கடந்த 01.03.2023 ஆம் திகதியில் இருந்து செயற்படும் வண்ணம் இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.காதி நீதிமன்றம் என்பது இஸ்லாமிய தனியார் சட்டத்தின் கீழ் திருமண  விவாகரத்து மற்றும் குடும்ப விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றமாகும். இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஒரு பகுதியாக காதி நீதிமன்றங்கள் உள்ளன.

Radio