வடமாகாண மீனவர்கள் குறித்த கலந்துரையாடலில் வடமாகாணம் சாராத இருவர்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண மீனவர்கள் குறித்த கலந்துரையாடலில் வடமாகாணம் சாராத இருவர்..

இலங்கையின் வடபகுதி கடலில் பரப்பிற்குள் ஊடுருவிய இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்கான சம்மதக் கலந்துரையாடலில் வடமாகாண மீனவர் 

பிரதிநிதிகள் என்னும் பெயரில் வடக்கு மாகாணத்தை சாரத இருவருடன் உரையாடி முடிவு என மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்களின் சமாசத் தலைவர் யஸ்ரின் சொஸ்சா தெரிவித்தார்.

இது தொடர்பில் மன்னார் மாவட்ட மீணவர் சங்கங்களின் சமாசத் தலைவர்   மேலும் விபரம்  தெரிவிக்கையில் ,

இலங்கை கடற்பரப்பிரப்பிற்குள் தொடர்ந்தும் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களினால் தொடர்ச்சியாக அதிகம் பாதிக்கப்படுவது வடக்கு மாகாண மீனவர்கள்தான். 

அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் , மன்னார் மீனவர்களும் அடுத்த படியாக கிளிநொச்சி முல்லைத்தீவு மீனவர்களும் உள்ளனர். இந்த வகையில் இந்திய மீனவர்களின் 

ஊடுருவலைத் தடுப்பதானால் ஊடுருவும் படகுகளை பறிமுதல் செய்வதும் மீனவர்களிற்கான ஓர் தண்டனையும் நீண்டகாலம் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இலங்கையில் 2017ம் ஆண்டுவரையில் கைப்பற்றப்பட்ட 174 படகுகள் கடற்படையினரின் பாதுகாப்பில் இருந்தது. இவற்றினை விடுவிப்பது 

தொடர்பில் கடற்றொழில் அமைச்சில் 3 சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளது. இதில் இரு சுற்றுப் பேச்சுக்களிற்கு வட மாகாண இணையத்தைச் சார்ந்தவர்கள் பங்கு கொண்டுள்ளனர். 

இருப்பிரும் இது தொடர்பில் உள்ளூர் மீனவ அமைப்புக்களிற்கு தெரியாது. அது தொடர்பில் எம்முடன் பேசவே இல்லை.

இதனை விட பேசிய பின்பும் எமக்கு கூறவில்லை. இவற்றினை விட மிக கொடுமையான விடயம் என்னவெனில் வட மாகாண இணையம் என்னும் பெயரில் 

குறித்த கலந்துரையாடலில் மீனவர் பிரதிநிதிகளாக கலந்து கொண்ட இருவருமே வடக்கு மாகாணத்தை சேர்ந்நவர்கள் கிடையாது. வடக்கு மாகாண மீனவர்களிற்காகவும் குரல்கொடுக்கின்றோம் 

என்னும் பெயரில் இங்கே செயல்பட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தைச் சேர்ந்த தெற்கைச் சேர்ந்தவரே ஒருவர் இவ்வாறு செயல்பட்டதனால் தற்போது ஒட்டுமொத்த செயல்பாட்டையுமே சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒரு புறமிருக்க இரண்டாம் நபர் வடக்கு மாகாணம் அல்ல . அவர் இலங்கையை சேர்ந்தவரே கிடையாது. அவுஸ்திரேலிய நாட்டினைச் சேர்ந்தவர் இலங்கையில் 

திருமண பந்தம் புரிந்தவர் கடல்சார் கற்கைநெறியை மேற்கொண்டவர். இவ்வாறு இருவருமே வடக்கினையும் பிரதி நிதித்துவம் செய்யவில்லை.  அதேபோல் இந்த இருவருமே கடலில் இறங்கித் தொழில் புரிவதும் இல்லை. 

இதனால்தான் நாம் அன்றுதொட்டு கடற்றொழிலாளர் அமைப்புக்கள் என்றால் அது கடலில் இறங்கும் மீனவனைக்கொண்டு அமைக்கப்பட வேண்டும். எனக் கோரிக்கை விடுத்து வந்தோம்.

கடலில் இறங்கி முதலை போட்டு அதனை இழந்து தவிக்கின்ற வேதனை அவனை ஒத்த மீனவனுக்கே முழுமையாக தெரியும். இச் சந்தர்ப்பத்தை தவறவிட்டதுபோன்று எதிர்காலத்திலும் தவறவிடக்கூடாது. 

வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவன் என்றால் பேசத் தெரியாது என்றோ அமைச்சர்களிற்கு விளங்கும் மொழியில் பேசக்கூடியவர்கள் நிறையவே உண்டு என்பதனை இவ்வாறு எமது சமூகத்தை அடைமானம் வைக்க முயல்வோர் மறக்க கூடாது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு