SuperTopAds

துப்பாக்கிப் பிரயோகம்; இளைஞன் உயிரிழப்பு ; நால்வர் படுகாயம்

ஆசிரியர் - Editor II
துப்பாக்கிப் பிரயோகம்; இளைஞன் உயிரிழப்பு ; நால்வர் படுகாயம்

பொரளை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்கருகில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் நான்கு இளைஞர்கள் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் காயமடைந்த அனைவரும் 21- 23 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் ரி -56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை,

இன்று நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து கொண்டிருந்தவர்களை குறிவைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Radio