SuperTopAds

நாவிதன்வெளி ஜம்மியத்துல் உலமா சபையினர் பிரதேச சபை உறுப்பினர்களுடன் சந்திப்பு

ஆசிரியர் - Editor III
நாவிதன்வெளி ஜம்மியத்துல் உலமா சபையினர் பிரதேச சபை உறுப்பினர்களுடன் சந்திப்பு

நாவிதன்வெளி ஜம்மியத்துல் உலமா சபையினர் பிரதேச சபை உறுப்பினர்களுடன் சந்திப்பு

நாவிதன்வெளி சவளக்கடை ஜம்மியத்துல் உலமா சபையினருக்கும் இப்பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம் பெற்றது.

உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.சி.தஸ்தீக் மதனி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் இம்முறை நாவிதன்வெளி பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

இதில் சமூகம் சார்ந்த பல விடயங்கள் உலமாக்களுடன் கலந்துரையாடப்பட்டன. உறுப்பினர்கள் அவர்களது கருத்துக்களையும் முன்வைத்து சபை அமர்வுகளில் சமூகம் சார்ந்த விடயங்களில் ஒற்றுமையாக செயற்படவுள்ளதாக உலமாக்கள் முன்னிலையில் உறுதியளித்தனர்.

இந் நிகழ்வில் உறுப்பினர்கள் உலமா சபையினரால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.